இலங்கை கடற்படையின் நீரளவியல் செயற்பாடுகள் ரோயல் இலங்கை கடற்படை காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. ஆரம்ப காலங்களில் பிரித்தானிய ரோயல் கடற்படை நீர் நிலைகளை மீள அளவீடுசெய்யும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியது. இன்றளவில் இவ்வாறு அளவீட்டின் மூலம் பெறப்பட்ட தகவகள் பயன்படுத்தப்படுகின்றன.

  இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட்ட முதலாவது அளவீடு, 1962,1963ஆம் ஆண்டுகளில் புல்மோட்டை கனிய மணல் திணைக்களத்திற்காக மரபு ரீதியிலான அளவீட்டு முறையினைப்ப பயன்படுத்தி பெறப்பட்ட நீரளவியல் ஆகும். இவ்வாறு திறட்டப்பட்ட தரவுகள் கடல் விளக்க பட்டியளிடளுக்கும் இறங்குதுறை நிர்மாணம் மற்றும் அது சார்ந்த அணுகுமுறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1967ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையானது அடிப்படை நீரளவையியல் கற்கைகளுக்காக கொச்சினில் அமைந்துள்ள இந்திய தேசிய நீரளவையியல் பாடசாலைக்கு கடற்படை அதிகாரிகளை அனுப்ப ஆரம்பித்தது. கடற்படையின் நீரளவையியல் கிளை 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முதல் அதிகாரியாக பின் நாட்களில் அதிகாரிகளின் பிரதானியாக தர உயர்வுபெற்ற லெப்டினன்ட் ஜஸ்ரின் ஜெயசூரிய திகழ்ந்தார்.

  கடற்படையின் கடலளவியல் கிளை 1972 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை கடல் எல்லை தொடர்பான கூறிடல் தொடர்பாக அதிகளவில் ஈடுபாடு காட்டினர். இதன்போது இந்திய கடலளவியலாளர்களால் பல்வேறு தொழிநுட்ப குறைபாடுகள் அவதானிக்கப்பட்டு அவைகள் சர்வதேச அமையங்களின் உதவியுடன் (UNCLOS & TALOS) தீர்க்கப்பட்டன.
  இதன் பின்னர் எடுக்கப்பட்ட ஒரு தேசிய முயற்சியின் விளைவாக 1984ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி தேசிய நீரியல் வள நிறுவனங்கள் (NARA) இன் கீழ் கடற்படையின் நீரளவை உபகரணங்களுடனும் கடற்படையின் செயற்பாட்டு கிளை தலைமையின் பங்காளிதத்துவத்துடனும் தேசிய கடலளவையியல் அலுவலகம் (NHO) நிறுவப்பட்டது.

  இன்று, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் கடற்படை தமது நீரளவையியல் திறன்களை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மீள செயல்படுத்தியுள்ளது. சிறந்த உற்பத்தித்திறன்களுக்காக வளங்கள் திரட்டும் வகையில் பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு மற்றும் பெற்றோலிய வள நிறுவனங்களுக்கு கடற்படையானது தனது நிபுனத்துவத்தை விஸ்தரிக்கவும் எண்ணியுள்ளது.

   
   
  அண்மைக்கால செயற்பாடுகள்


  ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திர சட்டம் சாசனத்திற்கமைய இலங்கைக்கான நேரான அடிப்படை கோட்டு எல்லை வரையறையை பிரிக்க வடக்கு பிரதேசத்தில் அடிப்படை புள்ளிகளை நிறுவுதல்

  DEOCOM (வெளி கண்டத்து விளிம்பு ஒதுக்கீடு) திட்ட காரியாலயத்தின் வேண்டுதலுக்கிணங்க கடற்படை நீரலவையியல் பிரிவினால் அடிப்படை புள்ளிகளின் அளவீட்டு ஆய்வு 2004 நவம்பர் 14 – 17 வரையான காலப்பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டது.

  இக்கணிப்பு கணிப்பாளர் நாயகம் திணைக்களம், தேசிய நீரலவையியல் காரியாலயம் மற்றும் DEOCOM காரியாலயம் ஆகியவற்றின் சம்பந்தப்பட்ட தோன்றாக அமைந்தது. இவ்வாய்வின் போது ஒரே நேரத்தில் மூன்று ஆய்வு குழுக்கள் பருத்தித்துரையிலிருந்து தலைமன்னார் வரை தெரிவு செய்யப்பட்ட அடிப்படை புள்ளிகளிலிருந்து கண்காணிப்புகளை மேற்கொண்டனர். கணிப்பை தவிர கடற்கரை மாதிரி சோதித்தல், நிலையம் பதிவு மற்றும் புதிய நிரந்தர அடையாளங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.

  நாட்டில் இவ்வகையான நோக்கத்திற்கு நடத்தப்படும் முதல் கணிப்பு இதுவாகையால் வட பிரதேசத்தித்கு சென்று அங்கே அடிப்படை புள்ளிகள் நிறுவுவதற்கும் கணிப்புக் குழு நடவடிக்கை எடுத்தது. இக்கணிப்பு முடியும்வரை கணிப்பாளர் நாயகம் திணைக்களத்தினால் அவர்களின் கணிப்பு நிலையங்கல் தொடர்ந்தும் இயக்கப்பட்டு வந்ததினால் இக்கணிப்பு நவீன ஆய்வு நுட்பங்கள் மற்றும் செயலாக்க வழிமுறையாக பயன்படுத்தி துல்லியமாக நடத்தக் கூடியதாக அமைந்தது.


  ஆதமின் பாலத்தில் உள்ள ஒரு சிறு தீவில் ஜிபிஎஸ் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டிருந்த ஒரு கணிப்புக் குழு, மணல் மேடுகளில் மோதுவதிலிருந்து தமது படகை தடுக்க கடற்படை வீரர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை கண்டு பாராட்டியது.

  இப்பகுதி மிகவும் விசித்திரமான மற்றும் கணிக்க முடியாததாகவும் உள்ளதுடன், இங்கே மிக விரைவில் ஒரு கணிப்பை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  கடற்படை நீர்பரப்பு அளவையியலாளர்கள், நில அளவையியலாளர்கள், புவியியலாளர்கள், சிவில் நீர்பரப்பு அளவையியலாளர்கள் மற்றும் ஆய்வு பதிவாளர்களை உள்ளடக்கிய ஒவ்வொரு கணிப்பு குழுவும் அவர்களின் கால அட்டவணைகிணங்க திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருந்ததுடன் கடற்படையினரால் வழங்கப்பட்ட சேவைகளுக்கு அவர்களின் நன்றியினையும் தெரிவித்தனர். இவாறான பாரிய ஒன்றிணைந்த செயற்பாடுகளின் மூலம் தேசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு கிடைக்கக்கூடிய பயன் பற்றி இச்சந்தர்ப்பம் அறிவூட்டியத்தாக அவர்கள் மேலும் தெரிவித்துக்கொண்டனர்.